close
Choose your channels

இந்த வாரம் வெளியேறும் பிக்பாஸ் போட்டியாளர் இவர்தான்!

Friday, December 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் 10 போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டிருந்த நிலையில் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சிபி, வருண், அபிஷேக், பிரியங்கா, இமான் அண்ணாச்சி, அக்ஷரா, தாமரைச்செல்வி, பாவனி, அபினய் மற்றும் ராஜூ ஆகிய 10 போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் இவர்களில் அபிஷேக், அபினய் மற்றும் வருண் ஆகிய மூவரும் குறைந்த வாக்குகள் பெற்று இருந்ததாகவும் இந்த மூவரில் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி குறைந்த வாக்குகளின் அடிப்படையில் அபிஷேக் இந்த வாரம் வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன ஏற்கனவே அபிஷேக் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 21வது நாளில் வெளியேறினார் என்பதும் அதன் பின்னர் பிக்பாஸ் குழுவினர் மீண்டும் அவருக்கு சிறப்பு அனுமதி அளித்தனர் என்பதும் ஆனால் இந்த முறையும் அவர் பார்வையாளர்களின் கவனத்தை பெறாததால் அவருக்கு குறைந்த வாக்குகள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.