பிக்பாஸ் டைட்டில் வின்னரின் முதல் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,October 02 2019]

பிக்பாஸ் முதல் சீசன் வின்னரான ஆரவ் நடித்த ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தன. இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ திரைப்படம் நவம்பர் 8ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் மீண்டும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

ஆரவ், நிகிஷா பட்டேல், நாசர், ராதிகா, சாயாஜி ஷிண்டே, தேவதர்ஷினி, முனிஷ்காந்த் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சரண் இயக்கியுள்ளார். சுரபி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சைமன்கிங் இசையமைத்துள்ளார்.