'அரபிக்குத்து' பாடலுக்கு ஆட்டம்: நெகட்டிவ் கமெண்ட்ஸ் பெற்ற பிக்பாஸ் பிரபலம்!

தளபதி விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ’அரபிக்குத்து’ பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகியது என்பதும், யூடியூபில் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே.

மேலும் இந்த பாடலுக்கு திரையுலக பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் நடனமாடிய வீடியோக்களும் வைரல் ஆனது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடிய வீடியோவை பதிவு செய்துள்ளார்.

இதுவரை வெளியான பிரபலங்களின் அரபிக்குத்து பாடல் வீடியோக்களில் இந்த வீடியோவுக்கு தான் ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்துள்ளதாக கூறப்படுகிறது. பல நெட்டிசன்கள் ஷிவானியின் நடனத்தை கேலியும் கிண்டலும் செய்து கமெண்ட்ஸ் பதிவு செய்தாலும் ஒரு சிலர் அவரது நடனத்தை பாராட்டியும் கமெண்ட் செய்துள்ளனர். மேலும் நெகட்டிவ் விமர்சனங்கள் இந்த நடனத்திற்கு குவிந்தாலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ் இந்த வீடியோவுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நான் மீண்டு வர நீங்கள் ஒருவர் தான் காரணம்: சமந்தாவின் நெகிழ்ச்சியான பதிவு

நான் பிரச்சனைகளால் சூழ்ந்திருந்த போது அதிலிருந்து மீண்டுவர நீங்கள் ஒருவர் தான் காரணம் என நடிகை சமந்தா நெகிழ்ச்சியாக தனது இன்ஸ்டாகிராம் பதிவு செய்துள்ளார்.

ஆர்ஜே பாலாஜியின் அடுத்த படத்தில் நாயகியாகும் பிரபல நடிகை!

ஆர்ஜே பாலாஜியின் அடுத்த படத்தில் பிரபல நடிகை ஒருவர் நாயகியாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிக்பாஸ் வீட்டில் நடந்த திடீர் திருமணம்: ஸ்ருதிக்கு மாப்பிள்ளை ஆனவர் யார் தெரியுமா

பிக்பாஸ் வீட்டில் ஸ்ருதிக்கும் சக போட்டியாளர் ஒருவருக்கும் திருமணம் நடப்பது போன்ற காட்சிகள் புரமோவில் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.வி.ஆர் ஸ்வர்ண மஹால் ஜூவல்லர்ஸின் விளம்பர தூதரானார் பிரியங்கா அருள்மோகன்! 

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' உள்பட ஒருசில படங்களில் நடித்த நடிகை பிரியங்கா அருள் மோகன் ஏ.வி.ஆர் ஸ்வர்ண மஹால் ஜூவல்லர்ஸின் புதிய விளம்பர தூதராகியுள்ளார்.

கமல், உதயநிதி படங்களை அடுத்து சிம்பு படத்திலும் இணைந்த பிரபல நடிகர்!

பிரபல மலையாள மலையாள நடிகர் ஒருவர் சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.