பிக்பாஸ் நடிகையின் பிகினி போஸ்: இணையத்தில் வைரல்!

  • IndiaGlitz, [Thursday,January 21 2021]

பிக்பாஸ் நடிகையின் பிகினி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்களை பதிவு செய்துவருகின்றனர்

கடந்த சில மாதங்களாக பல தமிழ் திரையுலக பிரபல நடிகைகள் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று வருகிறார்கள் என்பதும் நடிகைகளின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் இருந்தால் அவர்களுக்கு மாலத்தீவு அரசு இலவச பயண சீட்டு மற்றும் தங்கும் வசதி உள்பட பல சலுகைகளை வழங்கி வருவதாகவும், அந்த சலுகைகளை நடிகைகள் பலர் பயன்படுத்தி மாலத்தீவுக்கு சென்று வருவதாகவும் கூறப்பட்டது

அந்த வகையில் ஏற்கனவே காஜல் அகர்வால், பிரணிதா சுபாஷ், வேதிகா, ரகுல் ப்ரீத்தி சிங், சமந்தா உள்பட பல நடிகைகள் மாலத்தீவுக்கு சென்று அங்கிருந்து அழகான புகைப்படங்களை பதிவு செய்தனர் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்று, தற்போது தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ரைசா வில்சன் மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்களை அவர் கடந்த சில நாட்களாக பதிவு செய்து வரும் நிலையில் சற்றுமுன் பிகினி புகைப்படத்துடன் மாலத்தீவில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்

குறும்பா என்ற பகுதிகளில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பல்வேறு விதமான கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்