ஹாலிவுட் செல்லும் பிக்பாஸ் சாக்சி அகர்வாலுக்கு ஆசி வழங்கிய பாரதிராஜா!

  • IndiaGlitz, [Thursday,November 12 2020]

பிக்பாஸ் புகழ் சாக்சி அகர்வால் ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்து வரும் நிலையில் அவருக்கு ஆசி வழங்கிய இயக்குனர் இமயம் பாரதிராஜா, இந்த படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்துள்ளார்.

பலரின் பாராட்டை பெற்ற ‘வல்லதேசம்’ படத்தை இயக்கியவர் இயக்குனர் N.T.நந்தா. தற்போது 120 hours என்ற ஹாலிவுட் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரெய்லரை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்டு, நந்தாவிற்கு ஆசி வழங்கியுள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், ‘உலக சினிமாக்களைப் பார்த்து வியக்கும் தமிழர்கள், உலக சினிமாக்களையே இப்போது இயக்கிக்கொண்டிருக்கிறார்கள். இயக்குனர் N.T.நந்தா ஹாலிவுட்டில் வெற்றி இயக்குநராக வலம் வரவேண்டுமென்று வாழ்த்துகிறேன்’ என்று கூறியுள்ளார். மேலும் இயக்குனர் நந்தா டிரெய்லரில் மிரட்டியிருக்கிறார் என்று புகழ்ந்த பாரதிராஜா இந்த படத்தில் நடித்துள்ள பிக்பாஸ் புகழ் சாக்சிஅகர்வால் மற்றும் பிரணய் காளியப்பன் ஆகியோர்களுக்கும் ஆசி வழங்கியுள்ளார்.

மேலும் இந்த படம் குறித்து பாரதிராஜா கூறியபோது, ‘தமிழர்களின் இதயத்துடிப்பெல்லாம் இப்போது, பிக்பாஸில் தான் இருக்கிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களையெல்லாம், தங்கள் வீட்டிற்குள் இருப்பவர்களாகவே அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள். அந்த வகையில் சாக்சி அகர்வால் தமிழர்கள் மட்டுமல்ல, உலகத் தமிழர்கள் மத்தியில் பிரபலம். பாலிவுட்டில் இருப்பவர்கள் மட்டும்தான், ஹாலிவுட்டை கலக்க முடியும் என்ற விதியை மாற்றி, சாக்சி அகர்வாலின் நடிப்பின் அசாத்தியமான திறமையைப் பார்த்த நந்தா அவரை ஹாலிவுட்டில் அறிமுகம் செய்திருக்கிறார். சாக்ஷி அகர்வாலின் இந்த அறிமுகம், அவரை சினிமாவின் அடுத்த தளத்திற்கு கொண்டு போகுமென அவர் நம்புகிறார் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் பால் டெர்ரி, சீன் க்ரோனின், உள்பட பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் பணிபுரிந்துள்ளனர்.

More News

பேஸ்ட் வடிவில் தங்கக் கடத்தல்… கோவை விமான நிலையத்தில் பரபரப்பு!!!

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தப்படும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

வெற்றி வித்தியாசத்தைவிட நோட்டாவுக்கு அதிக வாக்கு… பரபரப்பை கிளப்பும் பீகார் தேர்தல்!!!

பீகார் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் 3 கட்டமாக நடந்து முடிந்தது. 7.3 கோடி வாக்குகள் கொண்ட இந்தத் தேர்தலில் 7 லட்சத்துக்கு அதிகமனோர் யாருக்கும் வாக்கு அளிக்க விருப்பம் இல்லை

சனம்ஷெட்டிக்கு உள்ளேயும் வெளியேயும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய சனம் ஷெட்டி பிரச்சனை செய்யாத நாள் ஏதாவது ஒன்று உண்டா? என்பதை தேடி கண்டுபிடிக்க வேண்டிய நிலையில்

சோம்சேகரை ரவுண்டுகட்டி அடிக்கும் ரியோ: கூட்டாளி ரம்யாவும் உடந்தை!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வாரம் பாட்டி சொல்லை தட்டாதே என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது என்பதும், இந்த் டாஸ்க்கை பிக்பாஸ் போட்டியாளர்கள் சுவாரஸ்யமாகவும்

லாக்டவுனுக்கு பின் நடிகைகளின் சம்பளம்: நயன்தாராவுக்கு எவ்வளவு?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்புகள் நடைபெறாததால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் இதனை ஈடுகட்ட மாஸ் ஹீரோக்கள்