close
Choose your channels

விஷ்ணுவிஷாலின் 'மோகன்தாஸ்' படத்தில் இணைந்த பிக்பாஸ் தமிழ் போட்டியாளர்!

Sunday, March 7, 2021 • தமிழ் Comments

நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ’காடன்’ மற்றும் ’எப்.ஐ.ஆர்’ ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் சமீபத்தில் அவர் நடிக்க உள்ள அடுத்த திரைப்படமான ’மோகன்தாஸ்’ என்ற படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

விஷ்ணு விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விவி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் இது குறித்த புகைப்படங்களும் வைரல் ஆனது என்பதையும் பார்த்தோம்.

விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் இந்த படத்தில் தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ஷாரிக் இணைந்துள்ளார். இவர் நட்சத்திர தம்பதிகளான ரியாஸ் மற்றும் உமா ரியோஸ் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் பூர்ணிமா பாக்யராஜ் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை இயக்குனர் ’களவு’ என்ற திரைப்படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Get Breaking News Alerts From IndiaGlitz