தண்ணி குடிக்காம நடிச்சதால விபரீதம்: பிக்பாஸ் ஃபாத்திமா பாபுவின் வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Sunday,June 27 2021]

சரியாக தண்ணீர் குடிக்காமல் நடித்ததால் ஏற்பட்ட விபரீதம் குறித்து பிக்பாஸ் பாத்திமா பாபு தனது அனுபவத்தை கூறியுள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரும், செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான ஃபாத்திமா பாபு, சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் தண்ணீர் சரியாக குடிக்காமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருந்ததால் தனது கிட்னியில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் இதனால் தனக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து தான் மருத்துவரை சென்று ஆலோசனை செய்த போது கிட்னியில் 8 சென்டி மீட்டர் அளவுக்கு கல் இருந்ததாகவும் அதன் பிறகு சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்னர் தான் தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்

மேலும் மருத்துவர் தன்னிடம் தினமும் 3 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும் என்றும் அப்பொழுது தான் உடல் நிலை சீராக இருக்கும் என்றும் அறிவுறுத்தியதாக கூறியுள்ளார். அந்த அறிவுரை எனக்கு மட்டுமல்ல, எல்லோரும் கண்டிப்பாக 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள், அப்போதுதான் உடல் நலத்துடன் இருக்க முடியும் என்று அந்த வீடியோவில் அனைவருக்கும் கூறியுள்ளார். பாத்திமா பாபுவின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

More News

ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பாக நிவாரண உதவி: 300 நபர்களுக்கு வழங்கிய உதயநிதி எம்.எல்.ஏ!

நடிகரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது தெரிந்ததே.

தெலுங்கு 'அசுரன்' படத்திற்கு வந்த சோதனை: ரசிகர்கள் அதிருப்தி!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிப்பில் உருவான 'அசுரன்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

விக்ரமுடன் இருக்கும் இந்த சிறுவன், இன்று ஹீரோ: யாரென தெரிகிறதா?

மேலே உள்ள புகைப்படத்தில் விக்ரம் மற்றும் சுஜித்ரா ஆகிய இருவருடன் இருக்கும் சிறுவன் இன்று தமிழ், மலையாள திரையுலகில் ஹீரோவாக இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

மீண்டும் இணைந்த விஜய்சேதுபதி-தமன்னா: வைரல் புகைப்படம்

விஜய்சேதுபதி மற்றும் தமன்னா ஆகிய இருவரும் சீனு ராமசாமி இயக்கிய 'தர்மதுரை' என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார்கள் என்பதும் இருவருமே டாக்டர் கேரக்டரில் நடித்திருந்த இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது

கமல்ஹாசன் பெயரை எழுதியே உலக சாதனை செய்த பெண்!

கமல்ஹாசனின் பெயரை மட்டுமே எழுதி உலக சாதனை செய்த இளம்பெண்ணுக்கு கமலஹாசன் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்