close
Choose your channels

மீண்டும் ஐக்கி பெர்ரியிடம் தெரியும் மாற்றம்: வைரல் புகைப்படம்!

Monday, December 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் ஐக்கி பெர்ரி மீண்டும் தனது தோற்றத்தை மாற்றிக் கொண்ட நிலையில் இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஐக்கி பெர்ரி என்பதும் அவருடைய ஹேர் ஸ்டைல் கலர் மற்றும் சிரித்த முகம் ரசிகர்களை கவர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் பள்ளிக்கு போகலாம் என்ற டாஸ்க்கில் ஐக்கி பெர்ரி மற்றும் அக்ஷரா ஆகிய இருவரது தலை முடியின் கலர் மாற்றப்பட வேண்டும் என்று பிக்பாஸ் தெரிவித்திருந்தார்.

அதன்படி வேறு வழியில்லாமல் ஐக்கி பெர்ரியும், அக்சராவும் தங்களது தலை முடியை கருப்பாக்கி கொண்டார்கள். இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேஷன் ஆன ஐக்கி பெர்ரி தற்போது மீண்டும் தனது ஹேர் கலரை கோல்ட் கலருக்கு முன்பு போலவே மாற்றியுள்ளார். தற்போதைய புதிய தோற்றம் கொண்ட ஐக்கி பெர்ரியின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன என்று குறிப்பிடப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.