close
Choose your channels

எப்படி இருக்குது நம்ம ஜூலியின் புது ஹேர்ஸ்டைல்?

Wednesday, July 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் ஜூலி திடீரென தனது சமூக வலைத்தளத்தில் புது ஹேர்ஸ்டைலுடன் உடன் கூடிய புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டதன் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் ஜூலி. நர்ஸ் தொழில் செய்து வந்த ஜூலி அதன்பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தனக்கு ஜல்லிக்கட்டு மூலம் கிடைத்த புகழை கெடுத்து கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அதே நேரத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இழந்த புகழை மீண்டும் பெற்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் ஜூலி, அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் அந்த புகைப்படங்களுக்கு நெட்டிசன்களின் கமெண்ட்கள் வித்தியாசமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கலர் கலராக ஹேர் ஸ்டைல் கொண்ட புகைப்படத்தை சமீபத்தில் ஜூலி வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்து பலர் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். இருப்பினும் ஒரு சிலர் ஜூலியின் ஹேர்ஸ்டைலுக்கு பாராட்டு தெரிவித்தும் வருகின்றனர். ஜூலியின் இந்த கலர்கலரான ஹேர் ஸ்டைல் எப்படி இருக்கிறது என்பதை கமெண்ட் பாக்ஸில் கூறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.