விரைவில் பிக்பாஸ் கவின் திருமணம்? மணப்பெண் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,December 05 2020]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகர் கவின், ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா?’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தற்போது அவர் ’லிப்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வினித் வரபிரசாத் இயக்கி வரும் இந்தப் படத்தில் ‘பிகில்’ படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது கவின் விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் அவர் காதலித்து வரும் பெண்தான் மணப்பெண் என்றும் கூறப்படுகிறது. கவின் மற்றும் மணப்பெண் ஆகிய இருதரப்பினரும் திருமணம் குறித்து பேசி முடித்து விட்டதாகவும் விரைவில் கவின் தனது திருமணம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது சக போட்டியாளர் லாஸ்லியாவை கவின் காதலித்ததாக கூறப்பட்டது. ஆனால் அந்த நிகழ்ச்சிக்குப் பின் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை என்பதும் காதல் குறித்து இருவருமே எதுவும் பேசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் லாஸ்லியாவின் தந்தை காலமான நிலையில் அவருடைய திருமணம் இப்போதைக்கு நடக்க வாய்ப்பில்லை என்பதால் கவினை திருமணம் செய்யவிருப்பது வேறு பெண் தான் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

More News

கார்த்திக் சுப்புராஜின் விக்ரம்-துருவ் படத்தின் படப்பிடிப்பு எப்போது?

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் முடிவடைந்துள்ள தனுஷின் 'ஜகமே தந்திரம்' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவரது அடுத்த படத்தில் சியான் விக்ரம் மற்றும்

'நாட்டாமை' புகழ் பிரபல குணசித்திர நடிகர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

பழம்பெரும் குணசித்திர நடிகரும் வசனகர்த்தாவுமான ஈரோடு சௌந்தர் இன்று காலமானார் அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் 

கூண்டோடு கைலாசமா? கமலின் அடுக்கடுக்கான கேள்விகளால் அர்ச்சனா குரூப் அதிர்ச்சி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் குரூப்பிஸம் இல்லை என்றும் போட்டியாளர்கள் அனைவரும் கூறிக் கொண்டிருந்தாலும் குரூப்பிஸம் இருக்கிறது என்பது பார்வையாளர்களுக்கு தெள்ளத்தெளிவாக தெரிகிறது 

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சருக்கு கொரோனாவா??? கதிகலங்க வைக்கும் தகவல்!!!

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவில் சார்பாக 2 தடுப்பூசிகள்  கண்டுபிடிக்கப்பட்டு தற்போது இறுதிக்கட்ட சோதனையில் இருந்து வருகிறது.

உட்பிரிவு சாதிகள் பொதுப்பெயருக்கு மாற்றம்… ஆனாலும் சலுகைகள் தொடரும்… முதல்வரின் தாராள அறிவிப்பு!!!

பட்டியல் சாதிகள் பிரிவில் உள்ள பள்ளர், கடையன், வாதிரியான், தேவேந்திர குலத்தான் உள்ளிட்ட உட்பிரிவு சாதிகளை இணைத்து