close
Choose your channels

சிவகார்த்திகேயன், அனிருத்துக்கு நன்றி சொன்ன கவின்: காரணம் இதுதான்!

Sunday, July 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் போட்டியாளரும் நடிகருமான கவின், தனது சமூக வலைத்தளத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் ஆகியோருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் கவின் ஒப்பந்தமான திரைப்படம் ’லிப்ட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளது. மேலும் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று ஏற்கனவே சமீபத்தில் வெளியான நிலையில் அந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘ஹே ப்ரோ’ என்ற பாடல் ஜூலை 22ஆம் தேதி மாலை 5 மணிக்கு ரிலீசாக உள்ளது.

இந்த பாடலை அனிருத் வெளியிட உள்ளார் என்பதும் இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் பாடி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து பாடலை பாடிக் கொடுத்த சிவகார்த்திகேயனுக்கும் ரிலீஸ் செய்ய ஒப்புக் கொண்ட அனிருத்துக்கும் தனது நன்றியை கவின் சமூக வலைதளம் மூலம் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.