close
Choose your channels

அஜித்தின் 'துணிவு' படத்தில் பிக்பாஸ் காதல் ஜோடியா?

Monday, October 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’துணிவு’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படப்பிடிப்பில் அஜீத் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் காதலர்களாக மாறிய அமீர் மற்றும் பாவனி ரெட்டி இந்த படத்தில் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாங்காக் படப்பிடிப்பில் அமீர், பாவனி ரெட்டி ஆகிய இருவரும் கலந்து கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் பிரபல மலையாள நடிகர் சிஜோய் வர்கீஸ் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிந்துவிடும் என்றும் அதன் பிறகு முழு வீச்சில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடத்தப்படும் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

அஜித், மஞ்சுவாரியர், ஜான் கொகைன், வீரா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் நீரவ் ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளில் வெளியாக வாய்ப்பு உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.