close
Choose your channels

கேன்ஸ் திரைப்பட விழாவில் பிக்பாஸ் மதுமிதா: வேற லெவல் கிளாமர் காஸ்ட்யூம்!

Monday, May 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் மதுமிதா தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு இருக்கும் நிலையில் வேற லெவல் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்துள்ளர். இந்த புகைப்படங்கல் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் மதுமிதா. ஜெர்மனியை சேர்ந்த இலங்கை தமிழரான இவர் அந்த நிகழ்ச்சியில் 42 நாட்கள் தாக்குப் பிடித்து விளையாடினார் என்பதும், அவருக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர் என்பதும் குறிப்பிடதக்கது .

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தனது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் மதுமிதா பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும். இந்த நிலையில் தற்போது பிரான்ஸ் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கேன்ஸ் பட விழாவில் இன்று அவர் கலந்துகொண்டார்.

விமானத்தில் பிரான்ஸ் செல்வது முதல் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டது வரை பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் அவர் வேற லெவல் கிளாமர் காஸ்டியூம் அணிந்து இருப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.