பிக்பாஸ் அடுத்த சீசனை தொகுத்து வழங்குவது இந்த பிரபல நடிகையா?

தமிழ் உள்பட பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்து 6வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான போட்டியாளர்கள் தேர்வு செய்யும் பணியும் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் தமிழ் 5 சீசன்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் 6வது சீசனையும் அவரே தொகுத்து வழங்குவாரா அல்லது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிம்பு தொகுத்து வழங்குவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கிய நிலையில் தற்போது அவர் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால், அவருக்கு பதிலாக நடிகை சமந்தா தொகுத்து வழங்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும், இதுகுறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சமந்தா ஒரே ஒரு நாள் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார் என்பதும் அந்த எபிசோடுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சிவகார்த்திகேயன் அடுத்த பட வில்லன் இந்த பிரபல இயக்குனரா?

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' மற்றும் 'டான்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ள நிலையில் தற்போது அவர் பிரபல தெலுங்கு

'தளபதி 67' படத்தின் நாயகி இவரா? விஜய்யுடன் 4வது முறையாக இணைகிறாரா?

 தளபதி விஜய்யுடன் ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்த நடிகை ஒருவர் 'தளபதி 67' படத்தின் நாயகி என்று கூறப்படுவதால் 4வது முறையாக விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

'தளபதி 66' படப்பிடிப்பு குறித்த மாஸ் தகவல்!

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 66' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் ஐதராபாத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்னர் முடிந்தது என்பதும் தெரிந்ததே.

அட்லி-ஷாருக்கானின் 'ஜவான்' டீசர்: ரிலீஸ் தேதியும் அறிவிப்பு

பிரபல இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதை பார்த்தோம்.

சத்ரபதி சிவாஜி கேரக்டருக்கு இந்த நடிகர் தான் பொருத்தமாக இருப்பார்: ரசிகர்கள் கணிப்பு

மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி கேரக்டருக்கு இந்த நடிகர் தான் பொருத்தமாக இருப்பார் என ரசிகர்கள் கணித்து அதுகுறித்த கற்பனையான புகைப்படத்தையும் பதிவு செய்துள்ள நிலையில்