close
Choose your channels

இந்த வாரமும் நாமினேஷனில் சிக்கிய கமல்ஹாசனால் எச்சரிக்கப்பட்டவர்!

Monday, November 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று அந்த வார இறுதியில் எலிமினேட் செய்யப்படுபவர் குறித்த நாமினேஷன் படலம் நடைபெறும் என்பது அனைவரும் தெரிந்ததே. இந்த நிலையில் இன்றும் அதே போல் நாமினேஷன் படலம் நடந்த நிலையில் இந்த வார நாமினேஷனில் சிக்கியவர்கள் குறித்த போட்டியாளர்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

இந்த வார நாளில் சிக்கியவர்கள் குறித்து பிக்பாஸ் அறிவிப்பு வெளியிடுகையில், ‘ஐக்கி பெர்ரி, சிபி, இமான் அண்ணாச்சி, பாவனி ரெட்டி, இசைவாணி மற்றும் அபிநய் ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டிருப்பதாக பிக்பாஸ் அறிவிக்கின்றார்.

கடந்த வாரமே ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் பட்டியலில் இருக்கும் அபிநய் கடைசி நேரத்தில் தப்பித்துக் கொள்கிறார் என்று கமல்ஹாசனால் எச்சரிக்கப்பட்டவர் என்பதும், அதேபோல் இதுவரை பதவியேற்ற கேப்டன்களில் எச்சரிக்கை விடப்பட்டவர் இசைவாணி என்றும் கமல்ஹாசனால் கூறப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அபினய், இசைவாணி இவர்கள் இருவருமே இந்த வார நாமினேஷனிலும் சிக்கியுள்ள நிலையில் யார் இந்த வார இறுதியில் வெளியேறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.