இந்த வாரம் நாமினேஷனில் பிரியங்காவிற்கு குறியா?

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேசன் படலம் நடைபெறும் என்பதும் அதில் அந்த வார இறுதியில் வெளியேற்றப்படும் போட்டியாளர்களுக்கான நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் தெரிந்ததே. 

இந்த நிலையில் இந்த வார நாமினேஷன் குறித்த முதலாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் இந்த வாரம் நாமினேஷன் பிராசஸ் தொடங்கலாம் என பிக்பாஸ் அறிவித்தவுடன் முதலாவதாக பிரியங்கா, சின்ன பொண்ணு மற்றும் அக்ஷராவை நாமினேட் செய்கிறார். ஏற்கனவே அக்சரா மீது அவருக்கு கருத்து வேறுபாடு இருப்பதால் அவரை நாமினேட் நிலையில் இரண்டாவதாக சின்னப்பொண்ணுவை நாமினேட் செய்கிறார்.

பிரியங்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரியங்காவை அக்சரா நாமினேட் செய்கிறார். ரூல்ஸ் பிரேக் செய்துவிட்ட விஷயத்தில் பிரியங்கா ஆர்ப்பாட்டம் செய்ததாக அவர் காரணம் கூறுகிறார் 

மேலும் பிரியங்காவுக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவரான அபிஷேக் நேற்று வெளியேறிவிட்ட நிலையில் நிரூப்புக்கும் பிரியங்காவுக்கு நேற்று பிரச்சினை வெடித்தது. இதனை அடுத்து அந்த பிரச்சனையை அடிப்படையாக கொண்டு நிரூப் பிரியங்காவை நாமினேட் செய்கிறார். அதேபோல் சின்ன பொண்ணுவும் பிரியங்காவை நாமினேட் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இமான் அண்ணாச்சி இசைவானியையும், இசைவானி மற்றும் தாமரை ஆகிய இருவரும் இமான் அண்ணாச்சியையும் நாமினேட் செய்கின்றனர். மொத்தத்தில் இந்த வாரம் பிரியங்காவுக்கு குறி வைக்கப்பட்டது போல் இன்றைய புரமோவில் இருந்து தெரிய வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு? யாருக்கு அதிகம்?

பிக்பாஸ் 5வது சீசன் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் தற்போது தான் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிவி பிரகாஷ் உடன் இணையும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம்: அதிரடி அறிவிப்பு!

ஜிவி பிரகாஷ் நடித்த திரைப்படம் ஒன்று நீண்டகாலமாக வெளியாகாமல் இருந்த நிலையில் அந்த திரைப்படத்தை வெளியிட ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் முன்வந்துள்ளது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

'என்னங்க சார் உங்க சட்டம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு: திரையரங்கிலா? ஓடிடியிலா?

பிரபு ஜெயராம் என்பவரது இயக்கத்தில் கார்த்திக் நடித்துள்ள திரைப்படம் 'என்னங்க சார் உங்க சட்டம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது

சிம்புவின் அடுத்த படத்தில் ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்!

சிம்பு நடித்து வரும் படம் ஒன்றில் ஹாலிவுட் ஸ்டன்ட் கலைஞர் இணைந்துள்ள தகவல் திரையுலகினரை பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 

தோனி மீது பாகிஸ்தான் ரசிகர் காட்டிய பாசம்: வைரல் வீடியோ

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்தியா முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது என்பதும், இன்றைய போட்டி துபாய் மைதானத்தில்