தள்ளிப்போகிறதா பிக்பாஸ் ஓடிடி: புதிய தேதி என்ன?

பிக்பாஸ் ஐந்தாவது சீசன் வரும் ஞாயிறு அன்று நிறைவு பெற உள்ள நிலையில் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சி ஜனவரி 23ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் செய்திகள் வெளியான நிலையில் அந்த நிகழ்ச்சி தற்போது ஒரு சில நாட்கள் தள்ளிப் போகும் என்று கூறப்படுகிறது.

பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளதாகவும் இதில் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 சீசன்களில் கலந்துகொண்ட சில போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் குறிப்பாக வனிதா, அனிதா, ஜூலி. ஓவியா, சினேகன், உள்பட ஒருசில போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது.

மொத்தம் 70 நாட்கள் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியை கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என்றும் இந்த நிகழ்ச்சி ஜனவரி 23ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த நிகழ்ச்சி ஜனவரி 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

98 நாட்கள் இருந்த தாமரையின் சம்பளம் இவ்வளவுதானா? 

பிக்பாஸ் வீட்டில் தாமரை 98 நாட்கள் இருந்த நிலையில், அவர் இருந்த நாட்களுக்கான சம்பளம் குறித்த தகவல் வெளியாகி பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இதுக்கு பேரு ஜல்லிக்கட்டா? பேசாம நிறுத்திடுங்க: பிரபல நடிகர் பேட்டி!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது என்பதும் அவற்றில் ஒரு கட்டுப்பாடு ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட

எனது நகைச்சுவை யாருக்கும் புரியவில்லை: மன்னிப்பு கேட்ட சித்தார்த்

தான் கூறிய நகைச்சுவை யாருக்கும் புரியவில்லை என்றும் அதனால் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் நடிகர் சித்தார்த் சாய்னா நேவாலுக்கு எழுதியுள்ள மன்னிப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முதல்முறையாக 'நெகட்டிவ்' வார்த்தை கேட்டு சந்தோஷம் அடைகிறேன்: த்ரிஷா டுவிட்

முதல் முறையாக நெகட்டிவ் என்ற வார்த்தையை கேட்டு சந்தோஷம் அடைகிறேன் என நடிகை த்ரிஷா  தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

கோடி கணக்கில் விலை… ஆனாலும் விற்பனையில் சக்கைபோடு போடும் சொகுசு கார்!

கொரோனா நேரத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கார் நிறுவனம் 117 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவிற்கு முதல் முறையாக விற்பனையில்