அமீருக்கும் பாவனிக்கும் திருமணமா? கல்லூரி விழாவில் அவரே அளித்த பதில்!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பாவனி ரெட்டியை, அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் அமீர் காதலித்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில் இருவருக்கும் திருமணமா? என்பது குறித்த கேள்விக்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்.

நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து பெண்கள் கல்லூரியில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பாவனி ரெட்டி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘முதல் வாரத்தில் இருந்து கடைசி வாரம் வரை தான் நாமினேஷன் செய்யப்பட்டதாகவும், ஆனால் எனக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறினார்.

மேலும் பெண்கள் தினத்தில் அறிவுரை கூறும் அளவுக்கு நான் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை என்றும் ஆனால் ஒன்றை மட்டும் தன்னால் உறுதியாக சொல்ல முடியும் என்றும் பெண்கள் மீது எந்த விமர்சனம் வந்தாலும் அந்த விமர்சனத்தை தள்ளிவிட்டு நம் மனதிற்கு எது சரியோ அதை தைரியமாக செய்யுங்கள், எந்த பிரச்சனையும் வராது என்று கூறினார்.

மேலும் ஆண்கள் நம் வாழ்க்கைக்கு தேவை இல்லை என்றும் ஒருவேளை திருமணம் செய்து கொடுத்தாலும் கணவர் தான் நம்மை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் இல்லாமல் நம்மை நாமே பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அவர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மாணவிகளில் சிலர், ‘அமீர் அமீர்’ என்று கூற உடனே ’உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தை போலவே எங்கள் வீட்டிலும் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள், ஆனால் அமீருக்கும் எனக்கும் ஒன்றும் இல்லை. ஒருவேளை ஏதாவது இருந்தால் நிச்சயம் உங்களிடம் சொல்கிறேன்’ என்று பாவனி ரெட்டி கூறினார்.

More News

ஜிவி பிரகாஷ்- பாரதிராஜா இணையும் புதிய படம்: டைட்டில் இதுதான்!

தமிழ் திரை உலகில் அதிக படங்கள் நடித்துக் கொண்டே இசையமைத்துக் கொண்டிருக்கும் ஜிவி பிரகாஷ், புதிதாக ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள நிலையில் அந்த படத்தில் முக்கிய

'அஜித் 61' படத்தின் அட்டகாசமான லுக்: வைரல் புகைப்படம்!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது என்பதும் நெகட்டிவ் விமர்சனங்களையும் தாண்டி இந்த படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்ததாக

நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ்: மகளிர் தினத்தில் பூஜை

தமிழ் சினிமாவில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நயன்தாரா, த்ரிஷா, சமந்தா உள்பட ஒரு சில நடிகைகளே நடித்து வரும் நிலையில் அந்த பட்டியலில் சமீபத்தில் இணைந்திருப்பவர் ஐஸ்வர்யா

விஜய் ரசிகரை பாராட்டிய அஜித் ரசிகர்!

விஜய் ரசிகரின் செயலை அஜித் ரசிகர் பாராட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாளவிகா மோகனின் மகளிர் தின கொண்டாட்டம்: யாருடன் தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தின் நாயகியான மாளவிகா மோகனன் மகளிர் தினத்தை கொண்டாடிய புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.