செம ஆட்டம் போட்ட பிக்பாஸ் ராஜூ: உடன் ஆடியவர்கள் யார் யார் தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆன ராஜு ஜெயமோகன் செம ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ராஜூ தான் என்பது கடந்த சில வாரங்களுக்கு முன்பே தெரிந்தது போலவே அனைவரும் எதிர்பார்த்தபடி ராஜூ டைட்டில் வின்னர் என அறிவிக்கப்பட்டு 50 லட்ச ரூபாய் பரிசு கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ராஜுவின் பேட்டிகள் மற்றும் அவரது செய்திகள் இணைய தளங்களில் வைரலாகி வரும் நிலையில் சமீபத்தில் ராஜூ செம ஆட்டம் ஆடிய டான்ஸ் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பிரபல கானா பாடலான தொரத்தாதய்யா என்ற பாடலுக்கு ராஜூ செம ஆட்டம் ஆடியுள்ளார். அவருடன் அமீர், நாடியா சாங் உள்பட பலரும் சேர்ந்து நடனம் ஆடியுள்ளனர். ராஜூவின் ஆட்டத்தை வேடிக்கை பார்த்ததோடு தனது மொபைல் போனில் தாமரைசெல்வி வீடியோ எடுத்த காட்சியும் உள்ளது.

பிக் பாஸ் ராஜு ஏற்கனவே கதாசிரியர், உதவி இயக்குனர், நடிகர், பாடகர், மிமிக்ரி கலைஞர் என பல்வேறு திறமைகளை கொண்டுள்ள நிலையில் தற்போது அவர் ஒரு நல்ல டான்ஸர் என்பதும் இந்த வீடியோ மூலம் உறுதி செய்யப்பட்டிருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர்.

More News

16 வருடங்களுக்கு பின் அஜித் படத்தில் இணையும் பிரபல நடிகர்!

அஜித் நடித்து முடித்துள்ள 'வலிமை' திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில் இந்த படம் வரும் மார்ச் மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அஜித் நடிக்கவிருக்கும்

'சம்பவம் இனிமேல் தான் ஆரம்பம்': செம கோபத்தில் இருக்கும் வனிதா!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் விரைவில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஜனவரி 30ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும்

விவாகரத்துக்கு  யார் காரணம்? சமந்தா-நாகசைதன்யா பிரிவு குறித்து நாகார்ஜூனா!

சமீபத்தில் பிரபல நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை பிரிய போவதாக அறிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

பிப்ரவரியில் தியேட்டர், ஏப்ரலில் டிவி: சூர்யா பட ரிலீஸ் குறித்த சூப்பர் பிளான்!

சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' என்ற திரைப்படத்தை பிப்ரவரியில் திரையரங்கிலும் ஏப்ரலில் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரபுதேவாவின் அடுத்த படத்தின் அட்டகாசமான அறிவிப்பு!

நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் பிரபுதேவா தற்போது மூன்று படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது