ராணியாக மாறிய ரம்யா பாண்டியன்: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Tuesday,May 04 2021]

பிக்பாஸ் மற்றும் ’குக் வித் கோமாளி சீசன் 1' ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதன் மூலம் ஏராளமான ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் நடிகை ரம்யா பாண்டியன். ‘ஜோக்கர்’, ‘ஆண் தேவதை’ உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் நடித்திருந்தாலும் இந்த இரண்டு நிகழ்ச்சிகளின் மூலம் தான் அவர் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரம்யா பாண்டியன் தனது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் அவர் பதிவு செய்யும் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிக பெரிய வரவேற்பு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ’ஒவ்வொரு பெண்ணும் ஒரு வகையில் ராணிதான்’ என்று கேப்ஷனாக குறிப்பிட்டு ராணி போன்றே காஸ்டியூமில் அவர் படுகிளாமராக காட்சியளிக்கிறார். மேலும் இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் பதிவு செய்து ஒரு மணி நேரமே ஆகியுள்ள நிலையில் இதற்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் குவிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது ரம்யா பாண்டியன், சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.