close
Choose your channels

பிக்பாஸ் ரியோவின் வீட்டில் குவிந்த நட்சத்திரங்கள்: என்ன விசேஷம்?

Monday, March 8, 2021 • தமிழ் Comments

இதுவரை நடந்த 4 பிக்பாஸ் சீசன்களில் நான்காவது சீசனின் போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் ஒற்றுமையாகயும் ஒருவருக்கொருவர் அடிக்கடி சந்தித்து தங்களது நட்பை புதுப்பித்தும் வருவது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் சக போட்டியாளர்களின் இன்பதுன்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்கள் சந்தோஷத்தையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்வதை பார்ப்பதற்கு உண்மையிலேயே ரசிகர்களுக்கு சந்தோசமாக உள்ளது

சமீபத்தில் நடந்த ஆஜித்தின் ஸ்டுடியோ திறப்பு விழா, அர்ச்சனா தங்கையின் வளைகாப்பு விழா சோமசேகர் பிறந்தநாள் விழா உள்பட பல நிகழ்ச்சிகளில் சக பிக்பாஸ் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது ரியோவின் செல்ல மகளான ரிதியின் முதலாவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பிக்பாஸ் பிரபலங்களும் விஜய் டிவி நட்சத்திரங்களும் வருகை தந்து குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்தனர். குக் வித் கோமாளி புகழ் அஸ்வின், பிக்பாஸ் போட்டியாளர்களாகிய ஆரி, சோம்சேகர், சனம் ஷெட்டி, விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா உள்பட பலர் இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz