close
Choose your channels

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நடிகரின் திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

Thursday, April 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரின் திரைப்படம் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ரியோ என்பதும் இவர் 100 நாட்கள் அந்த நிகழ்ச்சியில் தாக்குப் பிடித்து இறுதிப்போட்டி வரை பங்கேற்றார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ரியோ நடித்துவந்த ’பிளான் பண்ணி பண்ணனும்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்ததை அடுத்து தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படம் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியோ ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ள இந்த படத்தில் பாலசரவணன், ரோபோ சங்கர், குக் வித் கோமாளி பிரபலம் தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்கி உள்ளார் என்பதும் இவர் ஏற்கனவே ’பானா காத்தாடி’ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜா இசையில் ராஜசேகரின் ஒளிப்பதிவில் உருவான இந்த படத்தின் ஒரு பாடல் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது ஒளிபரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.