பிக்பாஸ் டைட்டிலை மிஸ் செய்த விக்ரமனுக்கு இப்படி ஒரு நிலையா? ஜொலிக்காத மற்ற போட்டியாளர்கள்..!

  • IndiaGlitz, [Tuesday,January 09 2024]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பிரபலமாகலாம் என்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றால் மிகப்பெரிய அளவில் திரையுலகில் வாய்ப்பு கிடைக்கும் என்றுதான் கூறப்பட்டது. கமலஹாசனும் பலமுறை பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு மிகப்பெரிய பிளாட்பார்ம் என்று கூறியுள்ளார்.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைக்கும் புகழை விட பல மடங்கு நெகட்டிவ் இமேஜ் தான் போட்டியாளர்களுக்கு கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி பிக் பாஸ் டைட்டில் வென்ற ஒருவர் கூட இன்னும் திரையுலகில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை என்பதும் முன்பு இருந்ததைவிட மோசமான நிலையில் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் டைட்டில் வின்னர்களான ஆரவ், ரித்விகா, முகின், ஆரி, ராஜூ ஜெயமோகன், அசீம் உள்ளிட்டவர்கள் இன்று வரை பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. டைட்டில் வின்னர் பட்டம் வெல்லாத ஹரிஷ் கல்யாண் உள்பட ஒரு சிலர் மட்டுமே ஓரளவு வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை கிட்டத்தட்ட நெருங்கிய விக்ரமன் வெளியில் தலைகூட காட்ட முடியாத அளவுக்கு தற்போது முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அறம் வெல்லும் என்ற ஒற்றை வார்த்தையின் மூலம் ரசிகர்களை அவர் கவர்ந்த நிலையில் கடைசி நேரத்தில் திடீரென அசீம் தான் டைட்டில் வின்னர் என அறிவிக்கப்பட்டதால் அவரது தரப்பினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர் வெளியே வந்தவுடன் அவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு அவருடைய இமேஜை டோட்டலாக மாற்றியது. பெண் வழக்கறிஞர் ஒருவர் தன்னை ஜாதி ரீதியாக விக்ரமன் திட்டியதாகவும், பணத்தை கறந்ததாகவும் காதலித்து ஏமாற்றியதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க அந்த வழக்கால் விக்ரமன் இமேஜ் டோட்டலாக சரிந்தது.

இந்த வழக்கின் விசாரணைக்காக ஆஜராக வந்தபோது கூட அவர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்றும் எந்தவிதமான விளக்கத்தை அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. பிக் பாஸ் டைட்டில் வின்னரை நெருங்கிய விக்ரமனுக்கு இந்த நிகழ்ச்சியால் பெரும் சோகம் தான் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாவது ஒரு சில சேனல்களில் தொகுப்பாளராக வேலை பார்த்து வந்த நிலையில் தற்போது அவரது முகத்தையே எந்த சேனலிலும் பார்க்க முடியவில்லை என்பது பெரும் சோகமாக பார்க்கப்படுகிறது.

More News

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'லால்சலாம்' ரிலீஸ் தேதி.. மாஸ் ஆக வருகிறார் மொய்தீன்பாய்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லால்சலாம்' திரைப்படம் பொங்கல் திருநாளில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன்பின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதாக செய்திகள் வெளியானது.

சின்னப்பையன் பயந்துட்டான்.. நிக்சன் குறித்து கூறிய அர்ச்சனா.. பதில் கேள்வி கேட்ட வினுஷா..!

பிக் பாஸ் வீட்டிற்கு வினுஷா மீண்டும் திரும்பி உள்ளதை அடுத்து அவர் தன்னை பற்றி நிக்சன் தரக்குறைவாக பேசியது குறித்து சக போட்டியாளர்களிடம் பகிர்ந்து வருகிறார் என்பதை பார்த்தோம்.

விஜயகாந்த் ஒரு சாமி.. அஞ்சலி செலுத்திய பின் விஷால் பேட்டி..!

விஜயகாந்த் ஒரு சாமி என்றும் மக்கள் அவரை சாமியாக தான் பார்க்கிறார்கள் என்றும் விஜயகாந்த் சமாதியில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்

சிறகடிக்க ஆசை: மனோஜ் விஷயத்தில் ரோகிணி அடக்கி வாசித்து இருக்கலாம்.. அவருக்கே திரும்பும் ஆபத்து..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த காட்சி என்று வந்துவிட்டது. மனோஜ் கடந்த சில மாதங்களாக வேலையில்லாமல் வெட்டியாக பார்க்கில் உட்கார்ந்து விட்டு

ஹால்ல ஃபேன் போட்டாச்சு.. மாயா இன்ஸ்டா பக்கத்தில் வாக்கு பிரச்சாரம்..!

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மாயா சமீபத்தில் தன்னுடைய வீட்டில் ஹாலில் ஃபேன் இல்லை என்றும் அதற்கு பதிலாக ஏசி போட வேண்டும் என்றும் இதனை எங்கள் வீட்டாரிடம் சொல்லி விடுங்கள்