close
Choose your channels

பிக்பாஸ் சரவணன் - மதுமிதா திடீர் சந்திப்பு: இணைந்து நடிக்கின்றார்களா?

Friday, January 31, 2020 • தமிழ் Comments

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் சரவணன் மற்றும் மதுமிதா என்பது தெரிந்ததே. கல்லூரி காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை விளையாட்டாக சரவணன் கூறியதை அடுத்து அவர் பெண்களை அவமரியாதை செய்து விட்டதாக கூறி பிக்பாஸ் நிர்வாகம் திடீரென சரவணனை வெளியேற்றியது. அதேபோல் பிக்பாஸ் விதிகளை மீறி தற்கொலைக்கு முயற்சித்ததாக மதுமிதாவும் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சரவணன் மற்றும் மதுமிதா ஆகிய இருவரும் சமீபத்தில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டபோது சந்தித்துக் கொண்டனர். இருவரும் இணைந்து ஒரு விளம்பர படத்தில் நடித்து வருகின்றனர் என்பதும், இந்த படப்பிடிப்பின் போது இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளி ஏற்றப்பட்ட பின்னர் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்த சரவணன் மற்றும் மதுமிதா ஆகிய இருவரும் சந்தித்துக் கொண்டதும், இருவரும் இணைந்து ஒரு விளம்பர படப்பிடிப்பில் நடித்து வருவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Get Breaking News Alerts From IndiaGlitz