பிக் பாஸ் தமிழ் டைட்டில் வின்னருக்கு 2வது குழந்தை.. ரசிகர்கள் வாழ்த்து..!

  • IndiaGlitz, [Monday,October 09 2023]

பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததை அடுத்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது பிக் பாஸ் 7வது சீசன் நடந்து வரும் நிலையில் பிக் பாஸ் முதலாவது சீசன் டைட்டில் வின்னர் ஆரவ் என்பது தெரிந்ததே. இவர் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் ஆரவ் கடந்த 2020 ஆம் ஆண்டு ராஹேன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் 2021 ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளதாக ஆரவ் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் செய்த பதிவில் கூறியிருப்பதாவது:

எங்கள் விலைமதிப்பில்லாத குட்டி இளவரசியை உலகிற்கு அறிமுகப்படுத்துவதில், எங்கள் இதயங்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கின்றன. எங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியால் அவள் நிரப்பியுள்ளார்.

எங்கள் குடும்பம் முழுமை அடைந்ததாக உணர்கிறோம். எங்களின் ஒவ்வொரு தருணத்தையும் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறோம். பெண் குழந்தையுடன் நாங்கள் இந்த அழகான பயணத்தை தொடங்கி உள்ளோம், உங்கள் அனைவரின் அன்பு , ஆசீர்வாதங்களுக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார்.

More News

நீ 16 வருடங்கள் மட்டுமே வாழ்வாய் என்று தெரிந்திருந்தால்.. விஜய் ஆண்டனி மனைவியின் உருக்கமான பதிவு..!

விஜய் ஆண்டனி மகள் மீரா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் விஜய் ஆண்டனியின் மனைவி உருக்கமாக தனது சமூக வலைத்தளத்தில் செய்த பதிவு கண்ணீரை வர வைக்கும் வகையில் உள்ளது.

கவினை மிஸ் பண்ணிட்டீங்களா? லாஸ்லியா கூறிய க்யூட் பதில்..!

பிக் பாஸ் சீசன் மூன்று நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக கலந்து கொண்ட கவின் மற்றும் லாஸ்லியா காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில் அந்த நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவுடன் இருவரும் ஒருவருக்கொருவர்

2 அரசியல் கட்சிகளுடன் விஜய்யை தொடர்புபடுத்தி செய்தி: புஸ்ஸி ஆனந்த் விளக்கம்..!

இரண்டு அரசியல் கட்சிகளுடன் விஜய்யை தொடர்புபடுத்தி முன்னணி நாளிதழ் ஒன்றில் இன்று செய்தி வெளியாகியுள்ள நிலையில் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி

இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டவர்கள் யார் யார்? யார் யாரை நாமினேட் செய்தார்கள்? முழு விவரங்கள்..!

 பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் நிலையில் இன்று  நாமினேஷன் செய்யப்பட்டவர்களின் முழு விவரங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

'பேச்சிலர்' நடிகைக்கு அடித்த அதிர்ஷ்டம்.. மீண்டும் கிடைத்த மாஸ் வாய்ப்பு..!

ஜிவி பிரகாஷ் நடித்த 'பேச்சிலர்' என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்த நடிகை திவ்ய பாரதிக்கு மீண்டும் ஒரு மாஸ் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.