close
Choose your channels

விஜய்யின் 'வாரிசு' படத்தில் இணைந்த பிக்பாஸ் நடிகை!

Tuesday, August 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில், தமன் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு நட்சத்திர கூட்டமே நடைபெறுகிறது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ‘வாரிசு’ திரைப்படத்தில் தற்போது லேட்டஸ்டாக பிரபல தெலுங்கு நடிகையும் பிக் பாஸ் தெலுங்கு சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருமான நந்தினிராய் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் தற்போது நடைபெறும் ‘வாரிசு’ படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார் என்றும் இவருக்கு இந்த படத்தில் முக்கிய கேரக்டர் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது

விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு உள்பட பலர் நடிக்கின்றனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவின் கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.