பாஜகவில் இணைந்த 'பிக்பாஸ் தமிழ் சீசன் 3' நடிகர்!

தமிழக பாஜக தலைவராக எல் முருகன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டதில் இருந்து திரையுலக நட்சத்திரங்கள் பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். மேலும் விரைவில் நடிகை வனிதா உள்பட ஒருசில நட்சத்திரங்கள் பாஜகவில் இணைய இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் நடிகரும் கர்நாடக இசைக் கலைஞரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவருமான மோகன் வைத்யா இன்று பாஜகவில் இணைந்துள்ளார். இன்று நடந்த ஒரு நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் முருகன் முன்னிலையில் மோகன் வைத்யா தன்னை பாஜகவில் நினைத்துக்கொண்டு பாஜகவின் அடிப்படை உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டார். மேலும் பாஜகவில் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது என்றும், வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக நிச்சயமாக வெற்றி பெறும் என்றும் தாமரை மலர்ந்தே தீரும் என்றும், எல். முருகன் முன்னிலையில் கட்சியில் இணைந்த கர்நாடக இசைக்கலைஞர் மோகன் வைத்யா பேட்டி அளித்துள்ளார்.

ஏற்கனவே குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், குட்டிபத்மினி, கங்கை அமரன், ராதாரவி உள்பட பல திரை நட்சத்திரங்கள் சமீபத்தில் பாஜகவில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பாகிஸ்தான் மற்றும் சீனா மீது போர்த்தொடுக்க தேதி குறிச்சாச்சு… பாஜக தலைவரின் சர்ச்சை கருத்து!!!

பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் இந்தியா போரிடும் தேதியை பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துவிட்டார்

கொத்துக் கொத்தாக செத்து மடியும் சீல்கள்… அதிர்ச்சியில் விலங்குநல ஆர்வலர்கள்!!!

நமீபியா கடற்கரை பகுதியில் இதுவரை 7,000 சீல்கள் செத்து மடிந்து, கரை ஒதுங்கியுள்ளதாகத் தகவல்

ஐபிஎல் திருவிழா ஆடுகளம்: சென்னை - பெங்களூர்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 44 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

வானம் என்ன அவன் அப்ப வீட்டு சொத்தா? இறக்குடா பிளைட்டா? சூரரை போற்று டிரைலர்

'சூரரைப்போற்று' திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் தடையில்லா சான்றிதழ் தாமதமாக வந்ததால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது 

நம் மனதில் எப்போதும் சூப்பர் கிங்ஸ்களாக இருப்பார்கள்: சாக்சி தோனியின் நெகிழ்ச்சியான பதிவு

நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூரு அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது.