அதை செய்யாமல் இருக்க முடியாது: படபடப்பை அதிகரிக்க வைத்த கமல்!

பிக்பாஸ் சீசன் 4 ஃபினாலே இன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது என்பதும் 6 மணி நேரம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் இறுதியில் டைட்டில் வின்னர் யார் என்பது அறிவிக்கப்படும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன் வெளியான இரண்டாவது புரமோ வீடியோவில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ஐந்து பேர்களையும் படபடக்க வைக்கும் வகையில் கமல்ஹாசன் கூறுகிறார். அவர் கூறியபோது, ‘5 வெற்றியாளர்கள் நாடி படபடக்க காத்துக் கொண்டு இருக்கின்றார்கள். அதில் ஒரு வெற்றியாளர் யார் என்பதை நான் வைத்திருக்கின்றேன். உங்களை இன்னும் படபடப்பாக காட்டுவதில் ஒரு சுவாரசியம் இருக்கத்தான் செய்கிறது. அதை செய்யாமல் இருக்க முடியாது என்று சிரித்துக்கொண்டே கமலஹாசன் கூறுவதிலிருந்து 5 போட்டியாளர்களை படபடக்க வைக்க அவர் ஏதோ பெரிதாக செய்யப்போகிறார் என்று தெரிகிறது.

இன்றைய 6 மணி நேர நிகழ்ச்சியை ஓட்டுவதற்கு பல்வேறு யுக்திகளை பிக்பாஸ் குழுவினர் செய்து இருப்பார்கள் என்றும் அனைத்தும் சுவராசியமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதுவரை நடந்த மூன்று சீசன்களில் வெற்றியாளர் யார் என்பது கடைசிவரை தெரியாமல் இருந்தது ஒரு திரில்லான அனுபவமாக இருந்தது என்பதும் ஆனால் இந்த சீசனில் ஆரி வெற்றியாளர் என்பது 99% தெரிந்துவிட்டதால் அந்த த்ரில் மிஸ்ஸிங் என்பது மட்டும் குறிப்பிடத்தக்கது.

More News

பிறந்த நாளில் ரிலீஸான எம்ஜிஆர் ரொமான்ஸ் ஸ்டில்: இணையத்தில் வைரல்!

புரட்சித் தலைவர் மக்கள் திலகம் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. எம்ஜிஆர் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தில் உள்ள வீட்டிற்கு

பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னருடன் சனம்ஷெட்டி? வைரல் புகைப்படம்!

பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரிதான் என்பதே கிட்டத்தட்ட ஐம்பது நாட்களுக்கு முன்னரே பார்வையாளர்களுக்கு தெரிந்துவிட்டது. அவருக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆதரவும் ஒவ்வொரு

பள்ளி கால தோழிகளுடன் கோவா சென்றபோது நடந்த விபத்து: வைரலாகும் கடைசி செல்பி!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 15 பெண்கள் சிறு வயதில் பள்ளியில் ஒன்றாக படித்த தோழிகளுடன் கோவாவுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். 15 பள்ளி கால தோழிகளும் நீண்ட வருடங்களுக்கு

பிரபல இயக்குனர் படத்தில் இடம்பெற்ற எம்ஜிஆர் பாடல்: முதல்வர் வெளியிட்டார்

பிரபல இயக்குனர் துரை இயக்கத்தில் இயக்குனர் அமீர் முக்கிய வேடத்தில் நடித்து வரும் 'நாற்காலி' என்ற படத்தில் இடம் பெற்ற எம்ஜிஆர் பாடலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளியிட்டுள்ளார் 

ரோட்டுக்கடைக்கு விசிட் அடித்த 'தல' அஜித்: இன்ப அதிர்ச்சியில் கடைக்காரர்!

தல அஜீத் திடீரென ரோட்டு கடை ஹோட்டல் ஒன்றுக்கு விசிட் எடுத்து சாப்பிட்டது அந்தக் கடைக்காரருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது