close
Choose your channels

இதுபோன்ற நபர்களை சூரசம்ஹாரம் செய்வோம்: PBSS பள்ளி விவகாரம் குறித்து பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

Wednesday, June 2, 2021 • தமிழ் Comments

சமீபத்தில் சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பதும் தற்போது அவரை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணையில் மேலும் பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் குறித்து ஏற்கனவே நடிகர் விஷால், நடிகை கஸ்தூரி உள்பட பல திரையுலக பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஆவேசமாக கருத்து கூறியுள்ளனர் என்பதும் குறிப்பாக நடிகர் விஷால், ராஜகோபாலன் போன்றவர்களை தூக்கில் தொங்க விட வேண்டும் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

ஆசிரியர் போர்வையில்
பள்ளி குழந்தைகளுக்கு
பாலியல் துன்புறுத்தல்கள் செய்பவர்களை சூரசம்ஹாரம் செய்வோம். ராஜகோபாலன் போன்றோருக்கு சட்டப்படி
எடுக்கும் நடவடிக்கை
இது போன்றோருக்கு
பாடமாக இருக்கட்டும்.

Get Breaking News Alerts From IndiaGlitz