close
Choose your channels

சசிகுமார் ஜோடியாகும் 'பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்

Thursday, December 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர் சசிகுமார் ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சசிகுமார் நடித்த ’உடன்பிறப்பே’ என்ற படத்தை இயக்கிய இரா சரவணன் என்பவர் இயக்கும் அடுத்த படத்தின் டைட்டில் ’நந்தன்’ என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்கும் நிலையில் அவருக்கு ஜோடியாக சுருதி பெரியசாமி நடித்து வருகிறார். இவர் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் ஒரு கிராமத்து கதையம்சம் கொண்டது என்றும் ஒரு பணக்காரருக்கும் அவரிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும் இடையே வரும் பிரச்சனையும் அதனால் ஏற்படும் விளைவுகள் தான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

பாலாஜி சக்திவேல் பணக்காரராகவும் அவரிடம் வேலை பார்க்கும் நபர்களில் ஒருவராக சசிகுமாரும் நடித்து வருகின்றனர். சசிகுமார் மனைவியாக சுருதி பெரியசாமி நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு புதுக்கோட்டை அருகே நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியும் என்றும் இயக்குனர் இரா சரவணன் தெரிவித்துள்ளார்.

சுருதி பெரியசாமி இந்த படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகிறார் என்றும், அவருக்கு இந்த படம் நிச்சயம் ஒரு பெரிய பிரேக்காக இருக்கும் என்றும் இயக்குனர் கூறியுள்ளார். மேலும் பாலாஜி சக்திவேல் தோரணை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் அதனால்தான் இந்த படத்தில் அவரை வில்லனாக நடித்து வைத்ததாகவும் அவரது கேரக்டர் நிச்சயம் பேசப்படும் என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.