ஒரே நாளில் அடுத்தடுத்த டாஸ்குகள்: செம ஆர்வத்தில் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை வாரம் ஒன்று அல்லது இரண்டு டாஸ்குகள் மட்டுமே கொடுக்கப்படும் நிலையில் இந்த வாரம் வித்தியாசமாக டாஸ்குகள் மேல் டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் நாமினேஷனில் அனைவரும் சிக்கியுள்ள நிலையில் இந்த நாமினேஷனில் இருந்து தப்பிக்க டாஸ்குகளில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நிலை இருப்பதால் போட்டியாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் டாஸ்குகளை விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள அடுத்த புரமோவில் அடுத்தடுத்து டாஸ்குகள் கொடுக்கப்படுகின்றன. முதலில் தண்ணீரை குடித்துவிட்டு இரும்பு கம்பியால் அமைக்கப்பட்டுள்ள வேலியில் படுத்துக்கொண்டே ஊர்ந்து செல்ல வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

இதனை அடுத்து சின்ன சின்ன பெட்டிகளை சரியாக பொருத்த வேண்டும் என்ற டாஸ்க் வைக்கப்படுகிறது. அதன் பின்னர் சாக்கின் உள்ளே இருந்துகொண்டு தாவித்தாவி ஓடும் டாஸ்க் நடத்தப்படுகிறது. அதன்பின்னர் முட்டைகளை உடைத்து சிந்தாமல் குடிக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு அடுத்தடுத்து டாஸ்குகள் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படுகின்றன என்பதும் போட்டியாளர்களும் அசராமல் மிகவும் ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கமல், அர்ஜூனை அடுத்து இன்னொரு பிரபல ஹீரோவுக்கு கொரோனா பாதிப்பு!

உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர்களுக்கு கொரோனா தொற்று சமீபத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோ ஒருவருக்கும்

கொரோனா பீதியில் 10 டோஸ் வேக்சின் செலுத்திக்கொண்ட நபர்… விளைவு என்ன?

நியூசிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் குறித்து அதிக அச்சம் கொண்ட நபர் ஒருவர், ஒரே நாளில் 10 டோஸ் கொரோனா

நட்புக்காக அண்ணன்களாக மாறிய இராணுவ வீரர்கள்… திருமணத்தில் நெகிழ்ச்சி!

உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற திருமணவிழா ஒன்றிற்கு எல்லைப்

மாற்றுத்திறனாளிக்கு பரிவோடு உதவிய காவலர்… சல்யூட் வைக்கும் நெட்டிசன்ஸ்!

காவலர்கள் என்றாலே கண்டிப்புடன் பணியாற்றக் கூடியவர்கள் என்றுதான் நம்முடைய புரிதல் இருந்துவருகிறது. இந்நிலையில்

மாட்டுச்சாண டாஸ்க்கில் ஜெயித்து ஆட்டம் போடும் போட்டியாளர் யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களுக்கு சில கடினமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது என்பதையும் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சளைக்காமல் விளையாடி வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே.