பிக்பாஸ் தமிழ் சீசன் 5: புரமோ படப்பிடிப்பின் அட்டகாசமான புகைப்படங்கள்!

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பானது என்பதும் இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் பிக்பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. இந்த சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கனி, சுனிதா உள்பட ஒரு சிலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 5 புரோமோ வீடியோ படப்பிடிப்பு நடைபெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருவதையடுத்து பிக் பாஸ் சீசன் 5 விரைவில் தொடங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கமலஹாசன் அட்டகாசமான மற்றும் கம்பீரமான தோற்றத்தில் வழக்கம் போல் இந்த புரமோ படப்பிடிப்பில் காணப்படுகிறார் என்பதும், பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டும் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.