பிக்பாஸ் சீசன் 5 எப்போது? 3வது அலைக்கு முன்பே தொடங்க முடிவு!

பிக்பாஸ் தமிழ் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜூன் மாதமே சீசன் 5 தொடங்க திட்டமிட்டு இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் அதிகமாக இருந்ததால் ஒத்திவைக்கப்பட்டது

இந்த நிலையில் தற்போது படிப்படியாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து மீண்டும் பிக்பாஸ் குழுவினர் நிகழ்ச்சியை நடத்தும் ஏற்பாட்டை தொடங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

கொரோனா இரண்டாவது அலை முடிவுக்கு வந்து மூன்றாவது அலை தொடங்கும் முன்னரே பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடங்கி விட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது

ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியானது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குகொண்ட தர்ஷா, பவித்ரா, சுனிதா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பதாகவும் அதே போல் பாடகர் தெருக்குரல் அறிவு, ஆர்ஜே வினோத் உள்ளிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் நடிகர் மன்சூர் அலிகான் உள்பட ஒரு சிலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. மிக விரைவில் பிக்பாஸ் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்