close
Choose your channels

அமீர், பாவனி, சிபியை அடுத்து மேலும் ஒரு பிக்பாஸ் சீசன் 6 பிரபலம்: 'துணிவு' லேட்டஸ்ட் அப்டேட்!

Friday, December 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் வரும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் பாடல் வரிகள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமீர், பாவனி, சிபி ஆகியோர் நடித்துள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜிபி முத்து ‘துணிவு’ படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருப்பதாகவும், அதுமட்டுமின்றி பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம், டான்சர் ரமேஷ் மற்றும் சில யூடியூப் பிரபலங்களும் இந்த படத்தில் நடித்திருப்பதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் எச். வினோத் தெரிவித்துள்ளார்.

அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இந்த படம் அஜித்தின் மற்றொரு வெற்றிப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.