Download App

மகத், சென்றாயனை அடுத்து சிம்புவை சந்தித்த பிக்பாஸ் பிரபலம்

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வரும் போட்டியாளர்கள் அவர்களுடைய வீட்டிற்கு செல்கின்றார்களோ இல்லையோ, சிம்புவின் வீட்டிற்கு சென்று அவரை சந்திக்க தவறுவதில்லை. ஏற்கனவே மகத் மற்றும் சென்றாயன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் சிம்புவை சந்தித்துள்ள நிலையில் தற்போது ஷாரிக்கும் சிம்புவை சந்தித்துள்ளார்.

சிம்பு-ஷாரிக் சந்திப்பு குறித்த புகைப்படங்கள் கடந்த சில மணி நேரங்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டின் ஆண் போட்டியாளர்களான ஷரிக், மகத், டேனியல் மற்றும் சென்றாயன் ஆகிய நால்வரின் வெளியேற்றத்திற்கும் ஐஸ்வர்யா-யாஷிகாவின் கூட்டணியே காரணம் என்று சமூக வலைத்தள பயனாளிகள் ஆத்திரத்துடன் பதிவு செய்து வருகின்றனர். மேலும் பிக்பாஸ் வீட்டின் ஒரே ஆண் போட்டியாளரான பாலாஜியையும் வெளியேற்ற அந்த கூட்டணி திட்டமிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது