close
Choose your channels

பிக்பாஸ் ஷிவானிக்கு அடித்த பம்பர் லாட்டரி!

Thursday, January 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் ஏற்கனவே இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார் என்ற செய்தியை பார்த்து வந்த நிலையில் தற்போது அவர் மேலும் ஒரு திரைப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ள தகவல் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’விக்ரம்’ படத்தில் ஷிவானி நாராயணன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அதேபோல் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய்சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கும் படத்திலும் ஷிவானி நாராயணன் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இயக்குனர் ’கொம்பன்’ முத்தையாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த செல்வகுமார் என்பவர் இயக்கும் ’பம்பர்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடிக்க ஷிவானி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் நடிகர் வெற்றி நாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் பம்பர் லாட்டரி குறித்த கதையம்சம் தான் இந்த படத்தின் கதை என்றும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்றும் இயக்குனர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.