close
Choose your channels

'விக்ரம்' படத்தை அடுத்து பிக்பாஸ் ஷிவானி ஒப்பந்தமான படம் எது தெரியுமா?

Tuesday, January 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் ஷிவானி நாராயணன் என்பதும் இவர் தற்போது கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ஷிவானி நாராயணன் நடித்து வருகிறார் என்றும் அவரது கேரக்டர் படத்தின் திருப்புமுனை கேரக்டர் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ’விக்ரம்’ படத்தை அடுத்து அவர் இன்னொரு பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சற்றுமுன் அறிவித்துள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், உள்பட சில வெற்றிப் படங்களை இயக்கிய பொன்ராம் அடுத்ததாக விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் என்பதும், இந்த படம் விஜய்சேதுபதியின் 46வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் தான் ஷிவானி நாராயணன் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனை உறுதி செய்யும் வகையில் இயக்குனர் பொன்ராம் உடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவு செய்து இயக்குனர் பொன்ராம் படத்தில் இணைவது மிகுந்த மகிழ்ச்சி என ஷிவானி குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.