close
Choose your channels

'ஜாலியோ ஜிம்கானா' பாடலுக்கு கவர்ச்சி உடையில் செம ஆட்டம் போட்ட ஷிவானி: வீடியோ வைரல்!

Friday, April 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தில் இடம்பெற்ற ’அரபிக்குத்து’ மற்றும் ’ஜாலியோ ஜிம்கானா’ ஆகிய இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி உலகம் முழுவதும் வைரல் ஆனது என்பதும் இன்று மூன்றாவது பாடல் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’அரபிக்குத்து’ பாடலுக்கும் 'ஜாலியோ ஜிம்கானா’ பாடலுக்கும் திரையுலக பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் நடனமாடிய வீடியோ இணையதளங்களில் வைரலான நிலையில் சற்று முன்னர் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் கமல்ஹாசனின் 'விக்ரம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருபவருமான நடிகை ஷிவானி நாராயணன் ’ஜாலியோ ஜிம்கானா’ பாடலுக்கு செம ஆட்டம் ஆடி உள்ளார்.

கவர்ச்சி உடையில் அவர் ஆடிய உள்ள டான்ஸ் வீடியோவுக்கு லட்ச்கணக்கில் லைக்ஸ்களும் ஆயிரக்கணக்கில் கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos