மங்களகரமான மஞ்சள் உடையில் பிக்பாஸ் ஷிவானி: புகைப்படம் வைரல்!

  • IndiaGlitz, [Saturday,March 06 2021]

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி கிட்டதட்ட 90 நாள் தாக்குப்பிடித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக்பாஸ் வீட்டில் பாலாஜிக்கு ஆதரவாக இருந்ததாக கூறப்பட்டாலும் கடைசி நேரத்தில் சிங்கப்பெண்ணாக ஃபினாலே டாஸ்க்கில் வென்று அதன்பின் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரும் சரி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் சரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான அழகான கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து லைக்ஸ்களை அள்ளி வருகிறார். ஒவ்வொரு நாளும் அவர் மாலை நேரத்தில் பதிவு செய்யும் புகைப்படத்திற்காகவே அவரது மில்லியன்கணக்கான ஃபாலோயர்கள் காத்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன் ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஞ்சள் உடையில் மங்களகரமான புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு வழக்கம்போல் கமெண்ட்ஸ்களும் லைக்ஸ்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போஸ்டில் அவர் கூறியிருப்பதாவது: 'இன்று ஒரு புதிய நாள். இந்த நாளில் எந்த மோசமான அதிர்வுகளையும் ஊடுருவ விட வேண்டாம்’ என்று பதிவு செய்துள்ளார்.