பிக்பாஸ் ஷிவானியின் பொங்கல் ஸ்பெஷல்:வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Thursday,January 14 2021]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் கடந்த ஞாயிறன்று சிங்கப்பெண்ணாக வெளியே சென்றார் என்பது தெரிந்ததும் அவர் இருந்த 95 நாட்களில் கடைசி வாரம் மட்டுமே மிக அருமையாக விளையாடி வீட்டை விட்டு செல்லும் போது நல்ல பெயருடன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் ஷிவானி நாராயணனின் சமூக வலைதளப் பக்கத்தில் எந்தவித அப்டேட்டும் இல்லாமல் இருந்ததை அடுத்து அவரது ரசிகர்கள் அவரைப் பற்றி அப்டேட்களை கேட்டுக்கொண்டிருந்தனர்

அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் பொங்கல் ஸ்பெஷலாக ஷிவானி தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அன்பு பொங்க, ஆசைகள் பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள். இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

பொங்கல் பானை மற்றும் கரும்புடன் கூடிய அவர் வரைந்த வண்ணமயமான கோலங்கள் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது