close
Choose your channels

ரகிட ரகிட: சரியான நேரத்தில் ரிலீஸ் செய்த பிங்க் பியூட்டி பிக்பாஸ் ஷிவானி!

Friday, June 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் சரியாக ’ஜகமே தந்திரம்’ ரிலீசான நேரத்தில் தனது இன்ஸ்டாகிராமில் ரகிட ரகிட ரகிட கேப்ஷனுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் மிகப் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணனுக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் மூன்று மில்லியன் பாலோயர்கள் உள்ளனர் என்பது தெரிந்ததே. அவருடைய ஒவ்வொரு புகைப்படமும் வீடியோக்களும் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களும், கமெண்ட்ஸ்களும் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று மதியம் சரியாக 12.30 மணிக்கு நெட்பிளிக்ஸில் தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் ரிலீஸ் ஆனது. சரியாக அதே நேரத்தில் தனது இன்ஸ்டாகிராமில் ஷிவானி நாராயணன் பிங்க் கலரில் உடை அணிந்த கிளாமர் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இதில் அவர் ‘ரகிட ரகிட ரகிட’ என்று கேப்ஷனையும் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படத்திற்கு பிங்க் பியூட்டி என்பது உள்பட பல்வேறு கமெண்ட்கள் குவிந்து வருகிறது என்பதும் இந்த புகைப்படம் பதிவு செய்த நான்கே மணி நேரத்தில் சுமார் ஒன்றரை லட்சம் லைக்ஸ்கள் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.