திடீரென இந்திய அளவில் டிரெண்டான பிக்பாஸ் ஷிவானி: காரணம் இதுதான்!

  • IndiaGlitz, [Sunday,August 08 2021]

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை ஷிவானி நாராயணன், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழகம் முழுவதும் பிரபலமானார். அது மட்டுமின்றி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருவதால் அவருக்கு ஏராளமான ஃபாலோயர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது திடீரென ஷிவானி நாராயணன் டுவிட்டரில் இந்திய அளவில் ட்ரண்ட் ஆனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஷிவானி நாராயணனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூன்று மில்லியன் ஃபாலோயர்களை சேர்ந்ததை அடுத்து அவரது ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர் தமிழ் திரை உலகில் இன்னும் அறிமுகமாகாத தொலைக்காட்சியில் மட்டுமே நடித்துவரும் ஷிவானி நாராயணன், பிக்பாஸ் மூலம் கிடைத்த பிரபலம் காரணமாக தற்போது அவர் மிகப்பெரிய சாதனையை இன்ஸ்டாகிராமில் செய்துள்ளார் என்று அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

மேலும் அவர் அவ்வப்போது பதிவு செய்த புகைப்படங்கள் மற்றும் தத்துவத்தையும் ஹேஷ்டேக்கில் பதிவு செய்து வருகின்றனர். 3 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை பெற்ற ஷிவானி நாராயணனுக்கு அவரது சக பிக்பாஸ் போட்டியாளர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனா தடுப்பூசியை இலவசமாக கொடுக்கும் முதல் நடிகர்! - சிரிஷுக்கு கிடைத்த பெருமை

திரையுலகைச் சேர்ந்த பலர் கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்த பொது மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்த போதிலும் முதல்முறையாக தமிழ் நடிகர் மெட்ரோ சிரிஷ், தடுப்பூசியை இலவசமாக வழங்கி உள்ளார்.

பகத்பாசில் பிறந்தநாளுக்கு 'விக்ரம்' இயக்குனர் கொடுத்த சர்ப்ரைஸ்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'விக்ரம்' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் பகத் பாசில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளிவந்தது என்பது தெரிந்ததே

சிம்புவால் தான் பிரச்சனையா? தயாரிப்பாளர் - பெப்சி மோதல் குறித்து ஆர்கே செல்வமணி அறிக்கை!

சிம்பு நடித்து வரும் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு காரணமாகத்தான் பெப்சி மற்றும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு இடையே பிரச்சனை வந்ததாக கூறப்படும் நிலையில்

சிவகார்த்திகேயனுடன் ஷிவாங்கி: 'டான்' படப்பிடிப்பின் புகைப்படங்களை பகிர்ந்த நடிகர்!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'டான்' படத்தின் படப்பிடிப்பின் இடையே எடுத்த புகைப்படங்களை பிரபல காமெடி நடிகர் பாலசரவணன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த புகைப்படங்கள்

நிறைவேறாத என்னுடைய கனவை நிறைவேற்றிய நீரஜ்: பிடி உஷா பெருமிதம்

நிறைவேறாத என்னுடைய 37 ஆண்டு கனவை நீரஜ் சோப்ரா நிறைவேற்றி உள்ளார் என பிடி உஷா மிகவும் பெருமிதமாகவும் உருக்கமாகவும் கூறியுள்ளார்.