'ருத்ரன்' படத்தின் பாடலை எழுதி பாடியவர் 'பிக்பாஸ் சீசன் 6' பிரபலமா?

  • IndiaGlitz, [Wednesday,April 12 2023]

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான ’ருத்ரன்’ திரைப்படம் வரும் தமிழ் புத்தாண்டு தினத்தில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த பாடலை எழுதி பாடியவர் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலம் என்பது தெரியவந்துள்ளது.

ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், சரத்குமார் நடிப்பில் உருவான ’ருத்ரன்’ திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கி உள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் ரிலீசாக உள்ளது. ’யூஏ’ சென்சார் சான்றிதழ் பெற்ற இந்த படத்தின் ரன்னிங் டைம் 150 நிமிடங்கள் என்றும் ஏற்கனவே செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று சிங்கிள் பாடல் வெளியானது. இந்த பாடலை எழுதி பாடியவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான அசல் கோலார் என்பது தெரியவந்துள்ளது.

ஜி வி பிரகாஷின் கம்போஸ் செய்த இந்த பாடலை அசல் கோலார் மற்றும் விக்கி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர் என்பதும் இந்த பாடலை அசல் கோலார் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர்..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ள நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது. 

மாலத்தீவில் லிப்லாக்.. ரொமான்ஸ் வீடியோவை வெளியிட்ட ஆல்யா மானசா..!

 தொலைக்காட்சி சீரியல் நடிகை ஆல்யா  மானசா கணவருடன் மாலத்தீவு சென்றுள்ள நிலையில் அங்கு ரொமான்ஸ் மூடில் லிப்லாக் முத்தம் கொடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பாரிஸ் ஜெயராஜ் ஆக மாறிய ஹாரிஸ் ஜெயராஜ்.. அம்மாவுடன் க்யூட் புகைப்படம்..!

தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ் தனது அம்மாவுடன் பாரிஸ் நகரில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் கமெண்ட்ஸ்

கார்த்தி - நலன் குமாரசாமி படத்தின் நாயகி இந்த பிரபல நடிகையா?

கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அம்மாடியோவ்.. என்ன ஒரு அழகான காதல்..! விஜயலட்சுமியின் வீடியோ தொகுப்பு..!

நடிகை விஜயலட்சுமி கடந்த ஒரு வருடமாக தினமும் தனது காதலை வெளிப்படுத்திய வீடியோ தொகுப்பை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அம்மாடியோவ், என்ன ஒரு அழகான காதல் என்று கமெண்ட்