close
Choose your channels

இளைஞர் மீது கார் மோதிய விபத்து: பிக்பாஸ் சினேகனுக்கு வந்த சிக்கல்!

Saturday, November 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவரும் பாடலாசிரியரும் நடிகருமான சினேகன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் என்ற பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் திடீரென இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அருண்பாண்டியன் என்பவர் மீது மோதியது. இந்த விபத்தில் அருண் பாண்டியனுக்கு படுகாயம் ஏற்பட்டதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன்பின் உயர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தற்போது சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண்பாண்டியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனை அடுத்து ஏற்கனவே கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், விபத்து ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது காயமடைந்த அருண்பாண்டியன் உயிரிழந்துள்ளதால் சினேகனுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.