களைகட்டிய பிக்பாஸ் சோம்சேகர் பிறந்த நாள் விழா: வைரல் புகைப்படங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்ற சீசன்களை விட பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் வித்தியாசமானவர்களாக உள்ளனர். குறிப்பாக பிக்பாஸ் வீட்டில் கருத்துவேறுபாடுகளுடன் இருந்தாலும், நிகழ்ச்சி முடிந்த பின்னரும் ஒருவருக்கொருவர் அவ்வப்போது சந்தித்து கொண்டு தங்களது நட்பை புதுப்பித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதற்கு முந்தைய சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் இதனை பின்பற்றியதாக தெரியவில்லை. பிக்பாஸ் சீசன் 4 முடிந்து இரண்டு மாதங்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில் போட்டியாளர்கள் அடிக்கடி ஒருவரை ஒருவரை ஒருவர் சந்தித்து இன்ப,துன்ப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகின்றனர்

அந்த வகையில் சமீபத்தில் சோமசேகர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் பாலாஜி, ஷிவானி, கேபி, சம்யுக்தா, ரியோ மற்றும் அவருடைய மனைவி ஸ்ருதி, சுரேஷ் சக்கரவர்த்தி, ரேகா, வேல்முருகன், அர்ச்சனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருப்பது ஆரோக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
 

More News

ஒரு தடவை பயம் போயிட்டா, திரும்ப வரவே வராது: 'ப்ரெண்ட்ஷிப்' டீசர்

பிக்பாஸ் புகழ் லாஸ்லியா, பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் உருவான 'ப்ரெண்ட்ஷிப்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது

நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு இவ்வளவு பெரிய மகன், மகளா? ஆச்சரிய புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் நடிகர்களில் ஒருவர் ஸ்ரீகாந்த், 'ரோஜா கூட்டம்' என்ற திரைப்படத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு அறிமுகமானார். அவர் அதன்பின் 'ஏப்ரல் மாதத்தில்' 'பார்த்திபன் கனவு' 'வர்ணஜாலம்

புடவை அணிந்த தசாவதாரம் பட அழகி… வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “தசாவதாரம்”. இதில் கமல்ஹாசனின் 10 கேரக்டர் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

ஒருத்தன் எவ்வளவு நாள் தான் நல்லவனாவே இருக்குறது: 'நெஞ்சம் மறப்பதில்லை' ஸ்னீக்பீக் வீடியோ

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவாகிய 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு சில ஆண்டுகள் ஆன போதிலும் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு கொண்டே இருந்தது.

'வலிமையில்' தல வேற லெவல் ஆக்சன்: ஒளிப்பதிவாளருடன் இணைந்து டுவிட் போட்ட பிரபலம்!

'வலிமை' திரைப்படத்தில் தல வேற லெவல் ஆக்ஷன் என 'வலிமை' படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவுடன் டுவிட் ஒன்றை பிரபலம் ஒருவர் பதிவு செய்துள்ளது வைரலாகியுள்ளது