'குக் வித் கோமாளி' சீசன் 6 படப்பிடிப்பு தொடக்கம்.. சவுண்ட் ஒரு குக்கா?


Send us your feedback to audioarticles@vaarta.com


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில், ஆறாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாகும் என்று ஏற்கனவே கூறப்பட்டது. அந்த வகையில் தற்போது இந்த சீசனின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. விஜய் டிவி இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரன்னராக வந்த "சவுண்ட்" என்ற சௌந்தர்யா இடம்பெற்று இருப்பதை அடுத்து, அவர் இதில் ஒரு குக்காக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் நான்கு சீசன்களில் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் நடுவர்களாக இருந்தனர். ஐந்தாவது சீசனில் மாதம்பட்டி ரங்கராஜ் தாமுடன் இணைந்தார்.
ஐந்தாவது சீசனில் சில சர்ச்சைகள் ஏற்பட்டன. குறிப்பாக, பிரியங்கா மற்றும் மணிமேகலை இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அந்த நிகழ்ச்சியை பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்த நிலையில், குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ ஏற்கனவே சில நாட்களுக்கு முன் வெளியானது. தற்போது ஒரு புதிய வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக இருக்க, புகழ், சுனிதா, சரத் மற்றும் ராமர் ஆகியோர் கோமாளிகளாக உள்ளனர்.
மேலும் இதில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான சௌந்தர்யாவும் இடம்பெற்று இருப்பதை அடுத்து, இந்த நிகழ்ச்சி களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments