close
Choose your channels

5 நிமிடத்தில் எப்படி சாத்தியம்? 18 வயது இளைஞரை பார்த்து அசந்த பிக்பாஸ் சுரேஷ்!

Friday, January 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

5 நிமிடத்தில் எப்படி சாத்தியம்? 18 வயது இளைஞரை பார்த்து அசந்த பிக்பாஸ் சுரேஷ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் ரசிகர்களால் ’சுரேஷ் தாத்தா’ என்று அன்புடன் அழைக்கப்பட்டார் என்பதும் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அவரது ஒவ்வொரு நடவடிக்கையையும் ரசிகர்கள் ரசித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

கிட்டத்தட்ட 100 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டில் சுரேஷ் தாக்குப் பிடிப்பார் என ரசிகர்கள் கணித்து இருந்த நிலையில் திடீரென அவர் நான்காவது வாரம் வெளியேற்றப்பட்டது அனைவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும் சுரேஷ்க்கு சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் ரசிகர்கள் குவிந்து கொண்டு வந்தார்கள் என்பதும் மக்கள் மனதில் அவர் நீங்கா இடம் பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சுரேஷ் தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்துவரும் நிலையில் 18 வயது இளைஞர் ஒருவரின் அபார திறமையை கண்டு அவரை வாழ்த்தி உள்ளார். தன்னுடைய உருவத்தை அச்சு அசலாக ஐந்தே நிமிடங்களில் வரைந்த 18 வயது இளைஞர் ரூபா என்பவருக்கு அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் ஓவியர் ரூபா வரைந்த பல ஓவியங்களை தன்னுடைய வீட்டின் சுவரில் வைத்து அலங்கரித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஐந்து நிமிடத்தில் தன்னுடைய உருவத்தை வரைந்தது எப்படி சாத்தியம்? அபார திறமையுள்ள ரூபாவுக்கு எனது வாழ்த்துக்கள், அவருக்கு எனது நன்றிகள்’ என்று சுரேஷ் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.