close
Choose your channels

பிக்பாஸ் சுரேஷ் மகனா இவர்? ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்!

Thursday, November 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தி அனைத்து போட்டியாளர்களுக்கும் சவாலான ஒரு போட்டியாளராக இருந்தது மட்டுமின்றி இதுவரை இல்லாத வகையில் தனித்திறமையுடன் விளையாடி வந்தார். அவருடைய தந்திரமான விளையாட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

முதலில் இன்னொரு வனிதா என்று விமர்சனம் செய்யப்பட்ட சுரேஷ், அதன் பின்னர் அவருடைய தந்திர விளையாட்டை பார்த்து ஆச்சரியம் அடைந்த பார்வையாளர்கள் அவருக்கு ஆர்மியும் ஆரம்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் திடீரென சமீபத்தில் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து குறைந்த வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார். சுரேஷ் வெளியேற்றப்பட்டதை இன்னும் ஜீரணிக்க முடியாமல் அவருடைய ஆர்மியினர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கே. பாலச்சந்தர் படங்கள் உள்பட ஒருசில படங்களில் நடித்திருந்த சுரேஷ் சக்ரவர்த்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மனைவி மற்றும் மகனுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்திருந்தார். இதனை அடுத்து சமீபத்தில் அவர் தனது மகனுடன் உள்ள புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். சுரேஷின் தோளுக்கு மேல் வளர்ந்து இருக்கும் அவரது மகனை பார்த்து சுரேஷ் மகனா இவர்? என்று ஆச்சரியத்தில் நெட்டிசன்கள் கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.