close
Choose your channels

பிக்பாஸ் 3 பிரபலத்தின் ஆதரவை பெற்ற சுரேஷ் சக்கரவர்த்தி!

Thursday, October 22, 2020 • தமிழ் Comments

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வயதான போட்டியாளர்கள் அதிகபட்சமாக ஐந்து அல்லது பத்து வாரங்களுக்குள் வெளியேற்றப்படுவார்கள். ஆனால் சுரேஷ் சக்ரவர்த்தி முதல் நாளிலிருந்தே சமயோசிதமாக விளையாட்டு காண்பித்து வருகிறார். தந்திரமாகவும், புத்திசாலிதனத்துடனும் அவர் விளையாடி வருவதால் கடைசி வரை இருக்கும் வலிமையான போட்டியாளர்களின் ஒருவராக சுரேஷ் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

எனவே அவரை துரத்தி அடிக்க அவர் கார்னர் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. தினசரி அவருடன் யாராவது ஒருவர் வம்புக்கிழுத்து அவருடைய வாயைப் பிடுங்கி அவருக்கு கெட்ட பெயரை வாங்கிக் கொடுக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது

அந்த வகையில் நேற்றைய அரக்கர்கள் டாஸ்கின்போது எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் சுரேஷ் சக்கரவர்த்தி அடித்ததை சனம் ஷெட்டி பெரிதாக்கி ஏதோ அவர் கொலை குற்றம் செய்தது போல் கத்தினார். சுரேஷ் ஏதோ மிகப்பெரிய தவறு செய்துவிட்டது போல் அர்ச்சனா நாட்டாமைத்தனம் செய்து அவரை மன்னிப்பு கேட்க வைத்தார். இதனால் வேறு வழியின்றி சுரேஷும் மன்னிப்பு கேட்டார். நேற்றைய அர்ச்சனாவின் செயலை பார்த்தபோது அவர் போட்டியாளர்களில் ஒருவரா? அல்லது பிக்பாஸின் தூதுவரா? என்ற சந்தேகம் ஏற்பட்டது

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் சுரேஷ்க்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்து பார்வையாளர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிக்பாஸ் சீசன் 3யில் கலந்து கொண்ட கவின் தனது சமூக வலைத்தளத்தில் சுரேஷ் சக்கரவர்த்திக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ’என்னுடைய முழு ஆதரவு உங்களுக்கு தான் சுரேஷ் சக்ரவர்த்தி சார்’ என்று கவின் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளதை அடுத்து அவருடைய ஆதரவாளர்களும் சுரேஷுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்

Get Breaking News Alerts From IndiaGlitz