close
Choose your channels

மீராவுக்கு ஒரு குறும்படம்: முகத்திரை கிழியுமா?

Saturday, July 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த வாரம் நிகழ்ந்த டிக்டாக் டாஸ்க்கில் ஒரு சின்ன பிரச்சனையை மீரா பூதாகரமாக கிளப்ப, அதனால் ஒட்டுமொத்த போட்டியாளர்களை அழைத்து ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்யும் அளவுக்கு கேப்டன் சாக்சி தள்ளப்பட்டார். பின்னர் நடந்த மீட்டிங்கில் 'நான் மீட்டிங் அரேஜ் பண்ணவே சொல்லவில்லை' என திடீரென மீரா பல்டி அடித்ததால் சாக்சி உள்பட அவருடைய தரப்பினர் மீராவின் மீது கடும் கோபம் கொண்டனர்.

இருந்தாலும் ஆணித்தரமாக மீரா, தனது பேச்சில் உறுதியாக இருந்தார். இதனால் மீராவின் முகத்திரையை கிழிக்க ஒரு குறும்படம் இந்த வாரம் ஒளிபரப்ப வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது

அதேபோல் இன்றைய அடுத்த புரமோவில் 'மீட்டிங் யார் அரேஜ் பண்ண சொன்னது என்பதை உறுதி செய்ய ஒரு குறும்படம் வேண்டும் என சேரன் உள்ளிட்ட போட்டியாளர்கள் கேட்க, கமலும் ஓகே சொல்ல இன்று ஒரு குறும்படம் ஒளிபரப்பாகும் என தெரிகிறது. இந்த குறும்படத்தில் மீராவின் முகத்திரை கிழிந்தாலும், அவர் இதையும் சமாளித்து அடுத்த பிரச்சனையை மிக எளிதில் துவக்குவார். அந்த அளவுக்கு அவரிடம் திறமை உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.